O/L எழுதிவிட்டு காத்திருக்கும் 3 மாத இடைவெளியில் தொழிற்கல்வி
சாதாரண தரப்பரீட்சை முடிந்த பின் பெறுபேறுகளுக்காக மாணவர்கள் காத்திருக்கும் மூன்று மாத கால இடைவெளியில் அவர்களின் பாடசாலை மூலமாக தொழிற்கல்வியை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் உயர்தரக்கல்வியை தொடரா விட்டாலும் இந்த நிகழ்வு மூலம் தமது எதிர்கால தொழில் வாழ்க்கைக்குத் தேவையான திறன்களையும் அறிவையும் பெற முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற (BMICH) நடைபெற்ற இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தின் டிப்ளோமா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
Post a Comment