Header Ads



வீடுகளுக்குள் வரவுள்ள மாற்றம்


 - Nasrath S Rosy -


இதை படிக்க உங்களுக்கு கொஞ்சமல்ல ரொம்பவே சங்கோஜமாகத்தான் இருக்கும், இருந்தாலும் இது தான் நிஜம்.


நம்மில் பலருக்கு விண்வெளியில் கழிவறை எவ்வாறு இயங்குகிறது என தெரியாது தான?


விண்வெளியில் மிதந்தபடி சர்வதேச நிலையத்தில் பணியாற்றும் வீரர்கள் தங்களது சிறுநீரையே குடிநீராக்கி அதனை குடித்துக்கொள்ளும் விதம் நமக்கு தெரியும் 


அதேபோல் அவர்களது திடக்கழிவினை எப்படி டிஸ்போஸ் செய்கிறார்கள் தெரியுமா? 


அவர்களுடைய கழிவுகளில் இருக்கும் ஈரப்பதத்தை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  உறிஞ்சியெடுத்து ஆவியாக்கிவிட்டு காய்ந்துபோன சக்கையை விண்வெளியில் விட்டுவிடுகிறார்கள் ,அது விண்ணில் நிறைந்திருக்கும் ஹீலியம் வாயு பட்டவுடன் தானாக எரிந்து சாம்பலாகிவிடுகிறது. 


அதாவது நாம் வழக்கம்போல நமது கழிவறைகளில் திடக்கழிவின் மீது நிறைய தண்ணீரைக்கொட்டி மேலும் அதில் ஈரப்பதம் ஏற்றி கழிவுநீர் குழாய்களில் நிறைத்து வைத்து விடுகிறோம். ஆனால் அதனை விண்வெளியில் செய்துபோல  காயவைத்து எரித்துவிட்டால் பூமியில் தண்ணீர் பயன்பாடு குறையும் என்பதற்காக பூமியில்  அடுத்தகட்ட நடவடிக்கையாக கழிவறைக்கு தண்ணீரே தேவைப்படாத அளவுக்கு அதே தொழில்நுட்பத்தைக்கொண்டு வீடுகளில் கழிப்பறை அமைக்கும் திட்டம் துவங்கவுள்ளது.


இதனைக் கூறுபவர் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்த ஷீலா நாயர் ஆவார். நாஸா நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த விண்வெளி Sewerage technologyஐ இனி பூமியிலும் நடைமுறைப்படுத்த ஒரு திட்டக்குழு அமைக்கப்பட்டு முதன் சோதனை ஓட்டமாக அமேரிக்காவில் கட்டப்படும் வீடுகளில் இத்தொழில்நுட்பம் புகுத்தப்படவுள்ளது. 


உலகின் ஒவ்வொரு பெரிய நாடுகளும் அவரவர் தேவைக்கேற்ப இயற்கை வளங்களை தனக்கேற அழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 


சீனாவில் சாப்ஸ்டிக்ஸ் தயாரிக்க பல்லாயிரம் மூங்கில் மரங்கள் அழிக்கப்படுகிறது.


அமேரிக்கா,ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் டாய்லட் பேப்பர் தயாரிக்க பல்லாயிரம் மரங்கள் அழிக்கப்படுகிறது.


அரபு நாடுகளிலும் இதர ஆசிய நாடுகளிலும் கழிவறைக்காகவே பலகோடி கேலன் அளவுக்கு டாய்லட் ஃபிளஷ் செய்ய தண்ணீர் தேவைப்படுகிறது.


இப்படி பளிங்குப்பொருட்கள் செய்ய தேவையான களிமண், பாத்திரங்களும் கரண்டிகளும் செய்ய உலோக வளங்களும் சுரண்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதனை தடுத்து அடுத்த நூறு ஆண்டுகளுக்கு தேவையான வளங்களை சேமித்து பூமியை காப்பாற்ற  வேண்டுமாயின் முதற்கட்டமாக நீரின் உபயோகத்தை குறைக்க வேண்டும் என்கிறது நாஸா. 


மற்ற நாடுகளில் டிசு பேப்பரில் துடைத்துப்போட்டு போவது போல இந்தியர்களால் அரபுகளால் நிச்சயமாக முடியாது..மற்ற ஆசிய நாடுகள் கூட இந்த பேப்பர் கலாச்சாரத்திற்கு மெள்ள மெள்ள மாறிவிட்டனர். ஆனால் நாமோ குடிக்க தண்ணீர் கிடைக்காவிட்டாலும் கழிப்பறை தேவைக்கு தண்ணீர் இல்லாமல் இருக்க முடியாது. நமக்கு கழுவுவதற்கும் ஃபிளஷ் பண்ணுவதற்கும் சரிசமமாக தண்ணீர் தேவை எனும்போது நம்மால் குறைந்தபட்சம் ஃபிளஷ் தண்ணீரையாவது சேமிக்க முடியும் என சொல்ல வருகிறது இந்த ரிப்போர்ட். உலகத்திற்கு மேலதிக தேவை தண்ணீர் தான் ஆகவே தான்  கழிவுநீரை மீண்டும் சுத்திகரிப்பு செய்து மாற்றுவழியில் உபயோகிக்க திட்டம் வகுத்து வருகின்றனர்.




No comments

Powered by Blogger.