கனடா Mp யும், ஆனந்தசங்கரியின் மகனுமான கரிக்கு இலங்கைக்கு வர விசா மறுப்பு
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரிக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை தொடர்பாக, குறிப்பாக மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் போர் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தாம் மேற்கொள்ளும் பணிகளுக்காகவே விசா மறுக்கப்பட்டதாக ஆனந்தசங்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
சுதந்திரமான பேச்சு, அரசாங்கத்திற்குப் பொருத்தமாக இருக்கும்போது அது அனுமதிக்கப்படுகிறது. கொடும்பாவிகளை எரிப்பதால், தொடர்ச்சியான இலங்கை அரசாங்கத்தின் தோல்விகளை சரி செய்ய முடியாது. வருந்தத்தக்க வகையில், இலங்கை எனது விசாவை மறுத்துவிட்டது. இது நாம் செய்யும் பணிக்கான பழிவாங்கலாகும்.
எனவே நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதேவேளை, கரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னணி தமிழ் அரசியல்வாதியான வி.ஆனந்தசங்கரியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment