Header Ads



முஸ்லிம் Mp க்களினால் ஏக­ம­ன­தாக உடன்­பாடு காணப்­பட்­டு, பரிந்துரைக்கப்பட்டுள்ள 16 விடயங்கள்


‘முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்டத் திருத்த உள்­ள­டக்­கங்கள் மார்க்­கத்­துக்கு முர­ணான விட­யங்­களைக் கொண்­டுள்­ளது. திரு­மண வயது, ‘வொலி’ தொடர்­பான சட்­டங்கள், பல­தார மணம், காதிகள் மற்றும் திரு­மணப் பதி­வாளர் நிய­மனம், காதி­நீ­தி­மன்ற முறை­மையில் செய்­யப்­ப­டு­கின்ற மாற்­றங்கள்  எமது சமூ­கத்தை எதிர்­ம­றை­யாக பாதிக்­கின்ற மூலக் கூறு­களை கொண்­ட­தாக காணப்­ப­டு­கி­றது. எனவே எமது இறு­தி­யா­னதும் முடி­வா­ன­து­மான நிலைப்­பாட்­டினை நாம் அறிக்­கை­யாக சமர்ப்­பித்­துள்ளோம்’ என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்ட திருத்­தங்கள் தொடர்பில் நீதி­ய­மைச்­ச­ருக்கு கைய­ளித்­துள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளார்கள்.


காதி­நீ­தி­ப­தி­க­ளாக செயற்­ப­டு­கின்ற பொறுப்பும் கட­மையும் ஆண்­க­ளுக்­கு­ரி­யது என மார்க்க வழிக்­காட்­டலின் அடிப்­ப­டையில் மார்க்க அறி­ஞர்கள் கருத்து தெரி­வித்­துள்­ளனர் என்றும் அவர்கள் அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளனர்.


குறிப்­பிட்ட அறிக்­கையில் முஸ்லிம் அமைச்­ச­ரொ­ரு­வரும் முஸ்லிம் அர­சியல் கட்­சியின் தலைவர் ஒரு­வரும் கையொப்­ப­மி­ட­வில்லை என அறிக்கை தயா­ரிப்­ப­தற்குப் பொறுப்­பாக இருந்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தெரி­வித்தார்.


1951ம்‌ஆண்டின் ‌13ம்‌இலக்க முஸ்லிம் ‌விவாக விவா­க­ரத்துச்‌ சட்­டத்தில் திருத்­தங்கள் மேற்­கொள்­கின்ற போது பின்­பற்­றப்­பட வேண்­டிய பரிந்­து­ரை­க­ளாக பின்­வரும்‌ பரிந்­து­ரைகள் ‌முஸ்லிம்‌ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் ‌ஏக­ம­ன­தாக உடன்­பாடு காணப்­பட்­டுள்­ளன.


1) பிர­தான சட்­டத்தின்‌ தலைப்­பி­லி­ருந்து ‘Muslim’ என்ற சொல்‌­நீக்­கப்­பட்டு ‘Persons Professing Islam’ என்ற சொற்­பி­ர­யோகம் ‌உள்­வாங்­கப்­ப­டக்‌­கூ­டாது.

2) பிர­தான சட்­டத்தில்‌ பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்ள Nikah Ceremony என்ற சொற்­பி­ர­யோ­க­மா­னது Solemnization’ என்ற சொற்­பி­ர­யோ­கத்­தினால் ‌மீள­மைக்­கப்­ப­டக்‌­கூ­டாது.

3) பிர­தான சட்­டத்தின் ‌பிரிவு 16 நீக்­கப்­ப­டாமல் அவ்­வாறே தொடர்ந்­து­மி­ருத்தல்‌ வேண்டும்‌.

4) மண­மகள்‌ தன்­னு­டைய சம்­ம­தத்தை வெளிப்­ப­டை­யாகத் தெரி­விப்­ப­தற்­காக திரு­ம­ணப்‌­ப­திவு ஆவ­ணத்தில்‌ கையொப்­ப­மிட வேண்டும்‌. ஆனால்‌, இந்த ஏற்­பா­டா­னது திரு­மண ஒப்­பந்­தத்தின் ‌கட்­டா­ய­மான தேவை­பா­டான, திரு­மண ஓப்­பந்­த­தா­ரர்­களில்‌ ஒரு­வ­ரான வலி­யி­னு­டைய கையொப்பம் ‌என்ற தேவை­பாட்­டினை இல்­லா­ம­லாக்­கக்‌­கூ­டாது.

5) திரு­ம­ணப்‌­ப­தி­வா­னது கட்­டா­ய­மாக்­கப்­பட வேண்டும்‌. பதி­யப்­ப­ட­வில்லை என்ற கார­ணத்­திற்­காக இஸ்­லா­மியத்‌ திரு­மணம்‌ ஒன்று வலி­தற்­ற­தா­காது. ஆனால்‌,

திரு­ம­ணப்‌­ப­தி­வா­னது ‘நிக்காஹ்‌’ நடக்­கின்ற அதே தினத்­தி­லேயே கட்­டா­ய­மா­கப்‌­ப­திவு செய்­யப்­பட வேண்டும்‌. அவ்­வாறு செய்யத் ‌தவ­றும்‌­பட்­சத்தில்‌ அது தண்­ட­னைக்­கு­ரிய குற்­ற­மாகக்‌ கரு­தப்­பட வேண்டும்‌. (இது திரு­ம­ணப்‌­ப­தி­வினை ஊக்­கு­விக்க உதவும்‌)

6) பெண்­களைத் ‌திரு­மணப்‌ பதி­வா­ளர்­க­ளாக நிய­மிப்­ப­தா­னது சமூ­கத்தில்‌ அவர்கள்‌ நீண்­ட­கா­ல­மாகப்‌ பின்­பற்றி வரு­கின்ற பாரம்­ப­ரி­யங்­க­ளில்‌­ந­டை­முறை ரீதி­யான அசெ­ள­க­ரி­யங்­களை ஏற்­ப­டுத்தும்‌. எனவே, பெண்‌ திரு­மணப்‌ பதி­வா­ளர்­களை நிய­மிப்­பதை அனு­ம­திக்க முடி­யாது.

7) நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­வா­னது, காதி­யாக நிய­மிப்­ப­தற்கு விண்­ணப்­பிப்­ப­வர்­களின்‌ பிராந்­தி­யத்தில்‌, அவர்கள்‌ தொடர்­பாக விசா­ரணை செய்­வ­தன்‌­மூலம் அவ­ரு­டைய கல்­வித்‌­த­கை­மைகள்‌, நன்­ன­டத்தை மேலும்‌, ஆற்றல்‌ போன்­ற­வற்றைப் ‌பரி­சீ­லித்து பொருத்­த­மான ஒரு நப­ரைக்‌­கா­தி­யாக நிய­மிக்க வேண்டும்‌.

8) ஆணுக்கும்‌ பெண்­ணுக்­கு­மான ஆகக்­கு­றைந்த திரு­மண வய­தாக 18 வயது நிர்­ணயம்‌ செய்­யப்­ப­டு­கின்ற போது, அந்­தக்‌­கு­றித்த பிரி­விற்கு ஒரு விதி­வி­லக்கு வாசகம்‌ அவ­சியம்‌.

9) காதி முறை­மை­யா­னது தர­வி­றக்கம் ‌செய்­யப்­ப­டக்‌­கூ­டாது. காதி­கள்‌­சபை, காதி முறை­மையில்‌ இருந்து இல்­லா­ம­லாக்­கப்­ப­டக்‌­கூ­டாது. பிர­தான சட்­டத்தில்‌ காதிகள்‌ மற்றும்‌ காதி­கள்‌­ச­பைக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களும் ‌கட­மை­களும்‌ அவ்­வாறே தொடர்ந்தும் ‌இருத்தல்‌ வேண்டும்‌.

10) பல­தா­ர­ம­ண­மா­னது சட்­டத்­தினால் ‌ஒழுங்­க­மைக்­கப்­பட வேண்டும்‌.

(a) பல­தா­ர­ம­ணத்­திற்கு காதி நீதி­பதி வழங்­கு­கின்ற அனு­ம­தி­யினை அல்­லது மறுப்­பினை மேன்­மு­றை­யீடு செய்­கின்ற இட­மாக காதி­கள்‌­சபை குறிப்­பி­டப்­பட வேண்டும்‌. (மாவட்ட நீதி­மன்றம்‌ அல்ல)

(b) பல­தா­ர­மணம் ‌தொடர்­பான குறித்த பிரி­வு­க­ளுக்கு மாற்­ற­மாக திரு­மணம்‌ ஓன்று நிக­ழு­மானால்‌ அது வலி­தற்­ற­தாகக் கொள்­ளப்­ப­டக்‌­கூ­டாது. ஆனால்‌, அவ்­வா­றான இரு­ம­ணங்­களைத் ‌தடுக்­கும்‌­வ­கையில்‌ தண்­ட­னை­களை வகுக்க முடியும்‌.

11) முஸ்லிம் ‌விவாக விவா­க­ரத்­துச்‌­சட்­டத்தின்‌16 மற்றும்‌ 98(2) பிரி­வு­களில்‌ உள்ள ‘விவா­க­ரத்து’ என்ற வார்த்­தையை நீக்­கக்‌­கூ­டாது.

12) பிர­தான சட்­டத்தின் ‌30வது பிரிவு அப்­ப­டியே நடை­மு­றையில்‌ இருக்­கும்­படி பரிந்­து­ரைக்‌­கிறோம்‌. எவ்­வா­றா­யினும்‌, இந்த நடை­முறை நிகழ்­வதை ஊக்­கு­விக்­காமல் ‌இருப்­ப­தற்­காக, நீதி­மன்­றத்­திற்கு வெளியே விவா­க­ரத்து அறி­விப்பை உச்­ச­ரிப்­ப­வ­ருக்கு அப­ராதம்‌ விதிக்­கவும்‌ பரிந்­து­ரைக்­கிறோம்‌.

13) பிர­தான சட்­டத்­தில்‌­கா­ணப்­ப­டு­கின்ற தலாக்‌ மற்றும் ‌பஸ்ஹ்‌ ஆகிய சொற்­ப­தங்கள்‌ நீக்கப்படக்‌கூடாது. குலா விவாகரத்து என்பது பிரிவு 28ல் வரையறுக்கப்பட்டு வெளிப்படையாக சேர்க்கப்பட வேண்டும்‌.

14) மத்தா தொடர்பான பிரிவுகள்‌ சட்டத்தில்‌ உள்வாங்கப்பட வேண்டும்‌. மத்தாவைத்‌ தீர்மானிக்கின்ற அதிகாரம் ‌காதிக்கு வழங்கப்பட வேண்டும்‌. அது தொடர்பான மேன்முறையீடு காதிகள்‌சபைக்குச்‌ செய்யப்பட வேண்டும்‌.

15) பிரிவு 74 ஆனது முன்மொழியப்பட்டுள்ள திருத்தச்‌சட்டத்தில்‌ நீக்கப்பட்டிருப்பதும்‌ ஏற்றுக்கொள்ள முடியாதது.

16) முஸ்லிம்‌ விவாக மற்றும்‌ விவாகரத்து ஆலோசனை சபை இல்லாமலாக்கப்படக்‌கூடாது. அது மேலும்‌ வினைத்திறனாகச் ‌செயற்படும் ‌வகையில்‌ திருத்தங்கள்‌ செய்யப்பட வேண்டும்‌.

 (ஏ.ஆர்.ஏ.பரீல்)


Vidivelli

No comments

Powered by Blogger.