சாதித்துக் காட்டிய கூலித் தொழிலாளி - கலாநிதி பட்டம் பெற்றவருக்கு குவிகிறது பாராட்டு
ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் நாகுலகுடம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி. வீட்டின் மூத்த மகளான இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.
பாரதி, அவரது ஊரிலுள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். குடும்ப சூழ்நிலை காரணமாக பாரதியால் படிக்க முடியவில்லை.
பின்னர், அவரது பெற்றோர் தாய் மாமாவான சிவபிரசாத்திற்கு பாரதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது குடும்பத்தின் நிலை காரணமாக பாரதி கூலி வேலைக்கு சென்றுள்ளார்.
இருந்தாலும், பாரதிக்கு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து பேராசிரியராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. மேலும், கல்வியின் மூலம் தான் உயர முடியும் என அவர் நினைத்திருக்கிறார்.
விவசாயப் பண்ணையில் தினசரி கூலித் தொழிலாளியாகப் பணிபுரிந்த பாரதி தனது பட்டப்படிப்பைப் பெற ஆறு வருடங்கள் உழைத்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.
பின்பு, அனந்தபூரில் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்து பட்டம் பெற்றார். வேதியியலில் முதுகலை பட்டம் பெற்ற பாரதியை கல்லூரி பேராசிரியர்கள் முனைவர் (Phd) பட்டப் படிப்பில் சேர ஊக்கப்படுத்தினர்.
இதனால், அவர் கிருஷ்ணா தேவராஜ் பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்ந்து தற்போது வேதியியலில் முனைவர் (Phd) பட்டம் பெற்றிருக்கிறார். இதற்கு, பாரதியின் கணவரும் உறுதுணையாக இருந்துள்ளார்.
பெண் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டு வேலைகளில் மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் , என் தாத்தா என்னைப் படிக்கச் சொன்னார் என்று பாரதி கூறியுள்ளார்.
இலங்கையிலுள்ள முஸ்லிம் பெண்களுக்கு இந்த பாரதியின் முன்மாதிரி மிகச் சிறந்த படிப்பினையாகக் கொள்ள வேண்டும். வறுமை, வாழ்க்கையில் சிரமம், குடும்பவாழ்க்கை, கூலித்தொழில் இவை அத்தனையையும் வாழ்க்கையில் சவாலாக எடுத்து கல்வியைக் கற்று முன்னேற வேண்டும் என்ற இலக்கில் பாடுபட்டு கலாநிதிப் பட்டத்தை ஒரு பெண் பெற்றுக் கொண்டார் என்பது ஒரு சாதாரண விடயமல்ல.ஆனால அது சாத்தியமானது என்பதை இந்த பாரதி பெண்கள் உலகத்துக்கு காட்டியிருக்கின்றார். எனவே தொழில் கூலித் தொழிலாக இருந்தாலும், வறுமை எவ்வாறு தடையாக இருந்தாலும் கல்வியில் பெண்கள் முன்னேற்றமடையலாம் என்ற உண்மையை சற்று கவனிப்பார்களா?
ReplyDelete