Header Ads



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ரணில் பெறவுள்ள வாக்குகளின் எண்ணிக்கை


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வார் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


ஹிகுரக்கொட பிரதேசத்தில் நேற்றைய தினம் (30.07.2023) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.


மேலும் கூறுகையில், ஜனாதிபதி 100 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் தமக்கு கிடையாது.


நாடு வங்குரோத்து அடைந்து விட்டதாக பலர் குறிப்பிட்ட போதிலும் ரணில் விக்ரமசிங்க நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டு எடுத்து வருகிறார். 


இன்னும் ஒரு மாத காலப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து முழுமையாக நாட்டை மீட்க முடியும். சிலர் தேர்தல் நடத்தவில்லையா என கேள்வி எழுப்புகின்றனர். தேர்தல் நடத்தியதனால் தான் மக்கள் வீதியில் வரிசையில் காத்திருக்க நேரிட்டது. 


எனினும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று வரலாற்று ரீதியான வெற்றியை ஈட்டுவார் என குறிப்பிட்டுள்ளார். 

1 comment:

  1. வஜிர அபேவர்தன என்பவர் பச்சைத்தண்ணி சாப்பிடும் கொம்பன் எருமை, அதாவது ரணிலுக்கு உள்ள ஒரே பட்டர் பூசும் ஆசாமி. இந்த எருமை உளருவது போல இலங்கை வரலாற்றில் யாருக்கும் இனிமேல் 45 இலட்சத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்கமாட்டாது என்பது தான் யதார்த்தம்.

    ReplyDelete

Powered by Blogger.