முத்துராஜாவினால் இலங்கைக்கு பெரும் அவப்பெயர்
தாய்லாந்தில் இருந்து நன்கொடையாகப் பெற்ற யானைகளில் புகழ் பெற்ற முத்துராஜா யானையை உரிய முறையில் பராமரிக்க இயலாமை குறித்து சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான பாராளுமன்றத் துறை மேற்பார்வைக் குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தினால் இலங்கைக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக மேற்படி குழுவின் தலைவர் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
அத்துடன், இச்சம்பவம் இலங்கைக்கு பெரும் அவமானம் எனத் தெரிவித்த மன்னப்பெரும, இவ்வாறான சம்பவங்கள் நடந்தால் சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டின் மீது என்ன அணுகுமுறையைக் கொண்டிருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment