Header Ads



ஒரே சவபெட்டியில் தாயினதும், குழந்தையினதும் சடலங்கள்


அங்குருவத்தோட்ட, ஊருதொடாவ பிரதேசத்தில் காணாமல்போன தாயும் மற்றும் குழந்தை படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு இன்றையதினம் (22-07-2023) பிற்பகல் கொண்டுவரப்பட்டது.


இருவரது உடல்களும் ஒரே சவப்பெட்டியில் ஒன்றாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் இன்றையதினம் இடம்பெற்றன.


அங்கு, சட்ட வைத்திய அதிகாரி வெளிப்படையாக தீர்ப்பு வழங்கி, உடல் உறுப்புகளை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைத்தார். விலங்குகள் கடித்ததால் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும், தாய் மற்றும் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்ததையடுத்து பிரதேசத்தை விட்டு வெளியேறியிருந்த அவரது மைத்துனரை அங்குருதொட்ட பொலிஸார் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்ய செல்லும் போது சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தரிக்கோலால் தாக்க முற்பட்டதாகவும், அதனை தடுக்க முற்பட்ட வேளையில் சந்தேகநபர் கத்திரிக்கோலால் தன்னை தானே குத்தி காயப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


No comments

Powered by Blogger.