பொலிஸ் சார்ஜன்ட்டின் காரியம் - தொலைபேசியுடன் கைது
வீட்டுக்குள் நுழைந்து குளியலறையில் இருந்த பெண்ணொருவரை கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்த அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை செவ்வாய்க்கிழமை (25) கைது செய்யப்பட்டதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக பொலிஸ் சார்ஜன்ட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் கடமையாற்றுவதாகவும், அண்டை காணிக்குள் இரகசியமாக சென்று , குறித்த காணியில் உள்ள வீட்டின் குளியலறையில் பெண் ஒருவர் குளிப்பதை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்ததை கவனித்த பெண், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்
குறித்த பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறிப்பிட்ட சந்தேக பொலிஸ் சார்ஜன்ட் கையடக்கத் தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்
Post a Comment