பக்கத்து வீட்டு பெண்ணின், தங்கச் சங்கிலியை அறுத்த இளைஞன்
இது பற்றி தெரிய வருவதாவது,
இருதயபுரம் மேற்கு 8 ஆம் பிரிவிலுள்ள முதியவரான பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சம்பவதினமான நேற்று 4.30 மணியளவில் சென்று வீடு திரும்பிய நிலையில் வீட்டின் வெளிபகுதியிலுள்ள மலசலகூடம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞன் ஒருவன் அவரின் கழுத்திலிருந்த 1 1/2 பவுண் தங்க சங்கிலியை அறுத்து எடுத்துக் கொண்டு அவரை கீழே வீழ்த்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து வீட்டில் பொருத்தப்பட்ட சிசிரி கமரா மூலம் குறித்த கொள்ளையனை அடையாளம் கண்டுகொண்ட பொலிஸார் கொள்ளையடிக்கப்பட்டவரின் வீட்டில் இருந்து 4 ஆவது வீட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்த தங்க சங்கிலியை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-
Post a Comment