Header Ads



தற்போதைய யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் கட்டண விபரம் - கடுகதி சொகுசு அடுத்த மாதம் ஆரம்பம்


யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு இடையிலான ரயில் சேவைக்கான கட்டணங்கள் தொடர்பான விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி உத்தரதேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாயாகவும் 2 ஆம் வகுப்பு – 2500 ரூபாயாகவும் 3 ஆம் வகுப்பு – 1800 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


யாழ் தேவி ரயிலில் 1 ஆம் வகுப்பு – 2800 ரூபாய் என்றும் 2 ஆம் வகுப்பு – 1900 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம் இரவு நேர தபால் ரயிலில் 1 ஆம் வகுப்பு – 3200 ரூபாய் என்றும் 2 ஆம் வகுப்பு – 2200 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நகர்சேர்கடுகதி ரயில் சேவை அடுத்த மாதம் தொடங்கியதும் அதற்கான கட்டணம் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் மற்றொரு யாழ்ப்பாணம் ஓடிசி என்ற சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கவாய்ப்புள்ளது. அதற்கான கட்டணம் 4000 ஆக இருக்கும்.


No comments

Powered by Blogger.