தாயின் சடலம் மலர்சாலையில் இருக்க, றக்பீ போட்டியில் பங்கேற்ற மாணவன்
இசிபதன கல்லூரிக்கு இந்தப் போட்டி மிகவும் முக்கியமானதாக இருந்தது, ஏனெனில் போட்டியில் தோல்வியடையாத தொடரை தக்கவைக்க இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டியிருந்தது.
எவ்வாறாயினும், இசிபதன அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஹெஷான் ரந்திமால் தன்னால் தாங்க முடியாத, மிகப்பெரிய வலியை உள்ளத்தில் மறைத்துக்கொண்டு இந்தப் போட்டியில் கலந்துகொண்டார்.
இந்த போட்டியின் போது ஹெஷான் ரந்டிமால் தனது தாயை பறிகொடுத்திருந்தார். தாயின் சடலம் மலர்சாலையில் வைத்திருக்க தனது அணியின் வெற்றிக்காக ரந்திமால் விளையாடியிருந்தார்.
தாய் உயிருடன் இல்லாத போதிலும் தனது தாயாருக்கு மகிமை சேர்ப்பதற்காகவும், பாடசாலைக்காகவும் போட்டியின் ஆரம்பத்தில் இசிபதன வித்தியாலயத்திற்கு முதல் ட்ரையை ரந்திமால் பெற்றுக்கொடுத்தார்.
மேலும் தனது அணியின் வெற்றிக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடினார்.
இந்த போட்டியின் பின்னர் இசிபதன அணியின் எதிர் போட்டியாளர்களான மருதானை சென்.ஜோசப் அணி வீரர்களும் ரந்திமாலின் தாயாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், விளையாட்டின் சகோதரத்துவத்தையும் மனித நேயத்தையும் உலகிற்கு எடுத்துரைத்தனர்.
Post a Comment