குவைத்தில் இடம்பெற்ற பொருளாதார ஊக்குவிப்பு விழா
வெளிநாட்டுத் தூதுவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்களின் பிரதிநிதிகள் , அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னணி வியாபார மற்றும் வர்த்தக் நிறுவனங்களின் அதிபர்கள், குவைத் நாட்டின் முக்கிய பிரமுகர்கள் வெளிநாட்டவர்கள், மற்றும் குவைத் அரச மற்றும் தனியார் ஊடக பிரதானிகளும் வருகை தந்து சிறப்பித்திருந்தனர்.
இவ்விழாவின் ஓர் அங்கமாக தூதுவர் மேதகு காண்டீபன் பாலசுப்ரமணியம் மற்றும் பிரதி தூதுவரும் நிர்வாக பிரதானியுமாகிய அப்துல் ஹலீம் ஆகியோரது வழிகாட்டலின் கீழ் இலங்கை தூதரகமானது இலங்கை திருநாட்டிற்கு பலமாக திகழும் சிலோன் டீ, வாசனை பொருட்கள், ஆடைகள், கைவினைப் பொருட்கள், கலாச்சார அம்சங்கள், சுற்றுலா மற்றும் இலங்கையின் தேசிய விமான சேவை ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் காட்சியறை ஒன்றை அமைத்திருந்தது.
இலங்கை தேயிலை சபையின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இலங்கை தேனீர் தயாரிக்கும் முறைமை குறித்து விளக்கும் வகையில் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த செயன்முறை நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை தேனீர் வகையறாக்களுடன் வருகை தந்திருந்த நூற்றுக்கணக்கான விருந்தினர்களுக்கும் உபசரிக்கப்பட்டனர்.
இலங்கையின் கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா தளங்களை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட ஊக்குவிப்பு காணொளிகள் இவ்விழா முடிவுறும் வரை ஒளிபரப்பப்பட்டன.
விழாவின் உபசார நிகழ்வினை அடுத்து இடம்பெற்ற ராதிகா கலை குழுவினரின் இரு கலை நிகழ்ச்சிகளும் கூடியிருந்த அனைவரையும் மெய் மறக்க செய்திருந்தது. இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் மற்றும் இலங்கை தேயிலை சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் பொதிகள் மற்றும் பரிசு பொருட்களுடன் அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்பட்ட வழிகாட்டி ஏடுகள் பார்வையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.
இலங்கை தூதரகம் – குவைத்
2023.07.13
Post a Comment