கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம், இன்றுமுதல் நிரந்தரமாக மூடப்படுகிறது
கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆகஸ்ட் 1 முதல்(01.08.2023), இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான விடயங்களை புதுதில்லியில் உள்ள நோர்வே தூதரகம் பொறுப்பேற்கும் என்று தூதரகம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுக்கு அமையவே நோர்வே தமது தூதரகத்தை இலங்கையில் மூடுகிறது.
இதன்படி இலங்கையை தவிர ஏனைய பல நாடுகளின் தூதரகங்களையும் நோர்வே மூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment