Header Ads



டிக் டொக் காதல் திருமணம் - திருமணமான பாடசாலை மாணவியின் உயிரை எடுத்தது


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில்,காப்பாற்றப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிற்சை பலனின்றி    உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,


 யாழ்  பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த குறித்த மாணவி க.பொ.த உயர்தரத்தை இடை நடுவில் கைவிட்டு சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை டிக் டொக்கில் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக  கூறப்படுகின்றது


இதனையடுத்து சில மாதங்கள் சீதுவைப் பிரதேசத்தில் கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில்  இருவருக்கும் இடையில்  ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக கணவரை பிரிந்து  மாணவி  யாழ்ப்பாணம் வந்துள்ளார்.


இந்நிலையில் கணவன் தொலைபேசி ஊடாக தொந்தரவு கொடுத்ததாகவும் மீண்டும் சீதுவைக்கு வருமாறும் இல்லாவிட்டால் காணொளிகள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவேன் எனவும்   மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.


இதன் காரணமாக மன விரக்தி அடைந்த மனைவி வீட்டில் தற்கொலைக்கு முயன்ற நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு  யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 


அதேவேளை  இணையங்களுக்கு அடிமையாகும்   மாணவர்கள் பலர் இப்படி தங்கள் படிப்பையும் தொலைத்து வாழக்கயையும்  தொலைக்கின்ற சம்பவங்கள் பெரும் வேதனையை ஏற்படுத்துகின்றது.


வாழ வேண்டிய வயதில் படிப்பை கைவிட்டு இணையங்களுக்கு அடிமையாகி , காதலில் விழுந்து  அதனையும் தொலைத்து விபரீத முடிவுகளுக்கு சென்று உயிரை மாய்க்கும் சம்பவங்கள்  தமிழர் பகுதிகளில்  நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கின்றது.


இது தொடர்பில்  பெற்றோர்கள் கவனமெடுத்து  தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சிந்தித்து அவர்கள்  வழிதவறிய பாதைகளில் செல்வதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

No comments

Powered by Blogger.