Header Ads



நாட்டிலிருந்து வெளியேறினார் தமயந்தி தர்ஷா


பதக்கம் வென்ற தடகள விளையாட்டு வீராங்கனையும் மெய்வல்லுநர் சங்கத்தின் முன்னாள் உப தலைவருமான தமந்தி தர்ஷா இலங்கையில் இருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.


மெய்வல்லுநர் விளையாத்துறை அதிகாரிகள் தன்னிடம் இருந்து எந்த பயனையும் பெற்றுக்கொள்வதில்லை எனவும் இப்படியான நிலைமையில், இலங்கையை விட்டு வெளியேற தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


“உண்மையில் விளையாட்டுக்காக நாங்கள் பலவற்றை தியாகம் செய்த விளையாட்டு வீராங்கனைகள். எனினும் எங்களது, அனுபவம் மற்றும் திறமையால், இந்த நாட்டுக்கு எதனையும் செய்ய முடியாது.


இதனால், அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற தீர்மானித்தேன். மீண்டும் இலங்கை திரும்பும் எதிர்பார்ப்பு எனக்கில்லை” என தமயந்தி தர்ஷா மேலும் கூறியுள்ளார்.


தமந்தி தர்ஷா தற்போது தனது கணவர் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார்.


தமயந்தி தர்ஷா, 90களில் தனது சக வீராங்கனையான சுசந்திகா ஜெயசிங்கவுடன் இணைந்து, 100மீ, 200மீ, 400மீ போட்டிகளிலும், பல சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை சார்பில் விளையாடியுள்ளார்.


அவர் தனது நாளில் 3 ஒலிம்பிக் போட்டிகளிலும், எண்ணற்ற ஆசிய மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.

No comments

Powered by Blogger.