Header Ads



பர்வீஸ் மஹரூப் பதவி விலகல்


இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப மற்றும் ஆலோசனைக் குழுவிலிருந்து முன்னாள் நட்சத்திர வீரர் பர்வீஸ் மஹரூப் பதவி விலகியுள்ளார்.


விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டிருந்தது.


சனத் ஜயசூரிய, சரித் சேனாநாயக்க, அசந்த டி மெல் மற்றும் கபில விஜேகுணவர்தன ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தக் குழுவிலிருந்து விலகுவதாக பர்வீஸ் மஹரூப் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.


ஶ்ரீலங்கா கிரிக்கட்டுடன் இணைந்து செயற்பட முடியாது என்ற காரணத்தினால் தாம் பதவி விலகுவதாக செய்வதாக எவரும் பிழையாக விளங்கிக்கொள்ள கூடாது எனவும், தாம் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகவும் பர்வீஸ் மஹரூப் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.