தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், புகுந்த மோட்டார் சைக்கிள்
இலங்கையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அனுமதியின்றி நுழைந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை மத்துகம வீதியிலிருந்து வந்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் தொடம்கொட நெடுஞ்சாலை நுழைவாயிலில் மாத்தறை நோக்கி பிரவேசித்து, வெலிபன்ன நோக்கி செல்ல முற்பட்ட போது, நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள், தொடங்கொடை நுழைவாயிலில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும் போது சந்தேக நபர் அதிகளவில் மது அருந்தியிருந்ததாகவும் அவர் மத்துகம பிரதேசததைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தொடங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment