Header Ads



இலங்கை ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி


இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை இலவசமாகப் பார்வையிடும் சந்தர்ப்பம் இரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்த டெஸ்ட் தொடர் நாளை (16.07.2023) ஆரம்பமாகவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.


அதன்படி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் எஸ்.எஸ்.சி. இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இரசிகர்கள் மைதானத்தில் இலவசமாக பார்வையிடலாம் என கூறப்பட்டுள்ளது.


முதலாவது டெஸ்ட் போட்டி நாளை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.சி.மைதானத்தில் இம்மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.