தேசிய ரீதியில் பாபுல் ஹஸன் பாடசாலை முதலிடம், பணிப்பாளர் இத்தமல்கொட மனதார பாராட்டு (படங்கள்)
அகில இலங்கை மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையே மின் டிஜிட்டல் முறையில் பாடசாலை மாணவர் பாராளுமன்றத்தில் வாக்களிப்பு முறையினை அறிமுகப்படுத்துகின்ற போட்டியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட வரகாப்பொல பாபுல் ஹஸன் தேசிய பாடசாலை மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் எம். ஐ. றஸீனா தலைமையில் இடம்பெற்றது.
கேகாலை மாவட்டத்திற்கு மட்டுமல்ல முழு சப்ரகமுவ மாகாணத்திற்கு பேருமையைத் தேடித் தந்த பாடசாலை மாணவர் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில் நான் கலந்து கொண்டதில் பெருமை அடைகின்றேன். இப்பாடசாலை மாணவர்கள் இப்பாடசாலைக்குப் பெற்றுக் கொடுத்த வெற்றி மிகப் பெறுமதிமிக்க வெற்றியாகும்.
இப்பாடசாலைக்குள் கிடைக்கக் கூடிய உள்ள வளங்களைப் பயன்படுத்திக் கொண்டு பாடசாலைக்கு சிறந்த பெறுபேற்றைப் பெற்றுக் கொடுப்பது நல்ல முயற்சியாகும். இப்பரிசனைப் பெற்று வந்த மாணவர் குழமத்தினர்கள் ஒரு முன்மாதரிமிக்க மாணவர்கள். கேகாலை மாட்டவத்திற்குப் பெரிய பெருமை. உங்கள் பாடசாலைக்கும் பெரிய பெருமை. நீங்கள் பெற்றுக் கொடுத்த பரிசு நல்லதொரு எடுத்துக் காட்டை இங்கு காட்டக் கூடியதாக இருக்கின்றது.
நிறைய வளங்களையும் வாய்ப்புக்களையும் கொண்ட பாடசாலைகளை விட உங்களிடம் உள்ள வளங்களை கொண்டு இலக்குகளை வென்று எடுத்துள்ளீர்கள். இதற்காக நான் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த வெற்றி இலக்கினை அடைவது ஒரு சாதாரண விடயமல்ல ஏதாவது ஒன்றில் வெற்றி பெற வேண்டுமாயின் அதற்குப் பின்புலமாக பலருடைய உதவிகள் இல்லாமல் வெற்றிபெற முடியாது. இந்த வகையிலான பரிசினை கடின உழைப்பின் மூலம் தான் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு மாணவர்கள், ஆசிரியர் குழாம், பெற்றோர்கள். அதிபர். அது உதவுகின்ற குழுவினர்கள் என பாரியளவிலான சவால்களைக் கொண்டுதான் வெற்றிபெற்று இருக்க வேண்டும் என்பதை அதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அந்த வகையில் உங்கள் அனைவருக்கும் கேகாலை மாவட்டம் அல்ல சப்ரகமுவ மாகாணம் சார்பாகவும் நான் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கேகாலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட திறன்மிக்க பாடசாலைகளில் இப்பாடசாலையும் ஒன்றாகும். பாபுல் ஹசன் பாடசாலை என்பது வரகாப்பொலவுக்கு மட்டுமல்ல கேகாலைக்கும் அதி விசேட பாடசாலையாகும். வலய மட்டப் போட்டிகளில் சித்திரைப்பட அழகியல் போட்டிகளில் இவ்வாறானதொரு பரிசில்களை பெற்று இருக்கிறார்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் திறமைகளைக் காட்டி வருகின்றனர், இவை போன்ற விடயங்களின் மூலம் முன் எழுந்து வரும் பாடசாலைக்கு ஏற்ப பாரிய கௌரவங்களைப் பெற்று வருகின்றன. உங்களுடைய அந்தப் பயணத்திற்கு நாங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்தப் பாடசாலையை கட்டி எழுப்புவதற்கென தங்களுடைய வியர்வைகளையும் கண்ணீர்களையும் சிந்தி உழைப்பதற்கென ஒரு குழுமத்தினர் இங்கு இருக்கின்றனர். இப்பாடசாலையின் சமூகத்தினர் இப்பாடசாலையின் குறை நிறைகளை அறிந்து அதற்கான தேவைகளைப் பெற்று வருகின்றனர். அவர்களுடைய சேவைகளை மதிக்கின்றேன் என்று அவர் தெரிவித்தார்
சமீபத்தில் ஆளுநகர் தலைமையில் நடைபெற்ற தகவல் தொடர்பு சாதான கல்வி தொடர்பான கூட்டத்தில் கேகாலை கல்வி வலயத்தில் மூன்று பாடசாலைகள் பற்றி அவர் கவனத்திற் கொண்டிருந்தார். தோராகமுவ மத்திய கல்லூரி, பாபுல் ஹஸன் தேசிய பாடசாலை, புனித சாந்த மரியாள் வித்தியாலம் ஆகிய மூன்று பாடசாலைகள் குறித்து பேசப்பட்டன. ஐ டி கற்கை நெறி தொடர்பில் முழு சப்ரகமுவ மாகாணத்திலும் இம் மூன்று பாடசாலைகளு பெயர் குறிப்பட்டுக் சொல்லக் கூடியதாக உள்ளன. அந்த வகையில்தான் இப்பாடசாலைக்கு விருது கிடைக்கப்பெற்றுள்ளது. தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லோரும் இப்பொழுது கதைக்கின்றனர். அந்த இடத்திற்கு நீங்கள் வந்துள்ளீர்கள். இதன் மூலம் இப்பாடசாலை அதிபர் ஆசிரியர் குழாம், பாடசாலையின் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் பெருமையடைய வேண்டும்.
இதற்கான பாராட்டை கல்வி வலயமும் எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ளவுள்ளன. பிள்ளைகளுக்கு கிடைக்கும் பரிசுகள் அது விலைமதிக்க முடியாத பரிசுகளாகும். இலங்கையில் மிகக் கவர்ச்சிகரமான பாடசாலையான ஆனந்த கல்லூரி மற்றும் கொழும்பிலுள்ள மிகப் பிரபல்யமான பாடசாலைகளுடன் போட்டியிட்டு வெற்றி கொள்ளவதாயின் அதி சிறந்த திறமை வேண்டும். அந்த வகையில் நாடளாவிய ரீதியில் அவர்களையல்லாம் வீழ்த்தி வெற்றிபெற்று இருக்கின்றீர்கள். இது ஒரு நல்லதொரு செய்தியாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
Post a Comment