Header Ads



காதலியுடன் சென்ற தயாசிறியின், மகனுக்கு நேர்ந்த பரிதாபம்


பம்பலப்பிட்டியில் காரில் தனது காதலியுடன் சென்று கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனை அச்சுறுத்தி பணம் மற்றும் 160,000 ரூபா பெறுமதியான தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


சம்பவம் தொடர்பில்  பதிவு செய்யப்பட்ட குற்றவாளியை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


தனது காதலியுடன் இருந்த  தயாசிறி ஜயசேகர மகனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தங்க நகை மற்றும் 3,000 ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றதாக திங்கட்கிழமை (03) மாலை பம்பலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேக நபர் முதலில் பணம் கேட்டதாகவும, பணம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் கூறியதையடுத்து,  இடுப்பிலிருந்த கத்தியை எடுத்து எம்பியின் மகனின் கழுத்தில் வைத்து மிரட்டியே பணத்தையும் தங்க நகையையும் கொள்ளையிட்டுள்ளார் .


இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.  


No comments

Powered by Blogger.