Header Ads



ஹம்தியின் ஜனாஸா நல்லடக்கத்தின் பின் ஆர்ப்பாட்டம், வைத்தியரை கைதுசெய்ய வலியுறுத்து (படங்கள்)


- அன்ஸிர் -

கொழும்பு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சையின் போது மருத்துவ அலட்சியத்தாலோ, அல்லது வேறு மறைமுக காரணங்களாலோ தனது இரண்டு சிறுநீரகங்களையும் இழந்த மூன்று வயது சிறுவன் முஹம்மது ஹம்தி 27.07.2023  பரிதாபமாக உயிரிழந்தான். 


இந்நிலையில் 4 நாட்களுக்குப் பின்னர், ஹம்தியின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) நல்லடக்கம் செய்யப்பட்டது.


ஜனாஸா நல்லடக்கத்திற்குப் பின்னர், அங்கு குழுமிய மக்கள், ஹம்தியின் மரணத்திற்கு நீதி வேண்டும், இதில் உள்ள மோசடிகளை அம்பலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




No comments

Powered by Blogger.