Header Ads



முஸ்லிம் தனியார் சட்டத்தில் சுமுகமான தீர்வுகள் எட்டப்படும்


(ஏ.ஆர்.ஏ.பரீல்)


முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்பில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­வைத்­துள்ள அறிக்கை மற்றும் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வினர் தயா­ரித்து வழங்­கி­யுள்ள அறிக்கை என்­பன கவ­னத்திற் கொள்­ளப்­பட்டு சுமு­க­மான தீர்­வுகள் எட்­டப்­படும் என நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.


நீதி­ய­மைச்சர் விஜே­ய­தா­ச­விடம் முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி­ சப்­ரி­யினால் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்த முஸ்லிம் விவாக, விவா­க­ரத்து சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­கான குழு அண்­மையில் தனது சிபா­ரி­சுகள் அடங்­கிய மக­ஜரை நீதி­ய­மைச்­ச­ரிடம் கைய­ளித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் நீதி­ய­மைச்சர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்­தீனின் தலை­மை­யி­லான குழு­வி­னரை தனது அமைச்­சுக்கு அழைத்து இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டினார்.


முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சட்­டத்­தி­ருத்த வரைபில் சில விட­யங்­களில் மாற்­றங்­களைக் கோரி­யுள்­ளதை குழு­வி­ன­ரிடம் எடுத்து விளக்­கினார். சட்­டத்­தி­ருத்தம் இஸ்­லா­மிய வரை­ய­றை­யினை மீறி வரைபு செய்­யப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முறை­யிட்­டுள்­ள­தையும் சுட்­டிக்­காட்­டினார்.


சட்­டத்­தி­ருத்த வரைபில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள திருத்­தங்கள் மற்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் திருத்தம் தொடர்­பி­லான வாதங்கள் என்­ப­ன­வற்­றையும் கருத்­திற்­கொண்டு சுமு­க­மான தீர்­வொன்­றினை எட்­டு­வ­தாக சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரிடம் நீதி­ய­மைச்சர் தெரி­வித்தார்.- Vidivelli

No comments

Powered by Blogger.