இரகசியக் கடிதம் அனுப்பிய மல்கம் ரஞ்சித்
புதிய பொலிஸ்மா அதிபரின் நியமனம் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், சபாநாயகர் உள்ளிட்ட அரசமைப்பு சபையின் உறுப்பினர்களுக்கு 3 பக்கங்களைக் கொண்ட இரகசியக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் பொலிஸ்மா அதிபர் பதவிக்குச் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளின் பெயர்களைக் கவனத்தில் எடுக்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் தங்களது கடமைகளை மீறியுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் இருவருக்கும் எதிராகக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதால் இவர்களைக் கவனத்தில் எடுக்க வேண்டாம் என்று அனைத்துக் கத்தோலிக்க மக்களின் சார்பிலும் கேட்டுக்கொள்வதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment