Header Ads



இஸ்ரேலில் இருந்து அடிக்கடி, இலங்கை வரவுள்ள விமானங்கள்


இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி பயணிகள் விமான சேவை, எதிர்வரும் ஒக்டோபர் முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.


அது தொடர்பான விசேட கலந்துரையாடல் அண்மையில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இரண்டு நாடுகளின் சிவில் விமான சேவை அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.


இதன்படி, இஸ்ரேலின் டெல் அவிவில் இருந்து கட்டுநாயக்க வரை நேரடி பயணிகள் விமான சேவைகள் முதன்முறையாக ஆரம்பிக்கப்படவுள்ளது.


இஸ்ரேலின் அகியா (Akia) விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் இலங்கைக்கான இந்த சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.


அது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.