இஸ்ரேல் - அமெரிக்கா சார்பான ரணிலுக்கு, பலஸ்தீனர் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சவால்
ரணில் விக்கிரமசிங்க சுவீடனில் குர்ஆன் எரிப்புக்கெதிராக அறிக்கை வெளியிட்டார். இது வரவேற்கத்தக்கது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இயலுமென்றால் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இடம்பெறும் அராஜகங்களுக்கு எதிராக அறிக்கைவிடட்டும்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறான அறிக்கையொன்று விடமாட்டார் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஏனென்றால் அவர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு சார்பானவராகவே இருக்கிறார். நாம் இங்கு விவாதிப்பதை விட நாட்டின் தலைவர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவே பலஸ்தீனை ஆதரித்து அறிக்கைவிடவேண்டும். அதுவே நாட்டு மக்களினதும் நாட்டினதும் நிலைப்பாடாக அமையும் என்றார்.- Vidivelli
Post a Comment