குடும்பமொன்றை வாழ வைக்கும் முள்ளம் பன்றிகள் (படங்கள்)
பொதுவாகவே முள்ளம் பன்றிகள் என்றாலே யாரும் அதனை நெருங்கவே பயப்படுவார்கள். ஆனால் அந்த முள்ளம் பன்றிகள் இலங்கையில் ஓர் குடும்பத்தை வாழவைத்துக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் ரம்புக்கனை – பின்னவளை பாதை புவக்தெனிய பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பம் முள்ளம் பன்றிகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வருகின்றது.
அக்குடும்பம் தான் வளர்க்கும் முள்ளம்பன்றிகளை வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு காட்டி அதன் மூலம் வரும் வருமானத்திலையே தனது குழந்தைகளுக்கான பாடசாலை செலவுகளை செய்து வருவதாக அதனை வளர்த்துவரும் குடும்பதலைவி கூறுகின்றார்.
அதுமட்டுமல்லாது தனது கண் பார்வையிழந்த கணவரின் மருத்துவ செலவுகளையும் இதன் மூலம் பெறும் வருமானத்திலையே பராமரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பலரும் அஞ்சும் முள்ளம் பன்றிகளால் ஒரு குடும்பமே வாழ்ந்து வருகின்ற சம்பவம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment