ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தின் கபட திட்டத்திற்கு தடை
பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மாநகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலத்தில் உள்ள சரத்துக்கள் அரசியலமைப்பின் விதிகளை மீறுவதாக உள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மையை பெற வேண்டும் என்பதோடு, அது சர்வஜன வாக்கெடுப்பின் மூலமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
குறித்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விதிகள் அரசியலமைப்பை மீறுவதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 27 மனுக்கள் இன்று (24) மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதனை அறிவித்துள்ளார்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் கலைக்கபட்டு வேட்புமனு கோரப்பட்ட உள்ளுராட்சி மன்றங்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்திருக்கும் என்பது குறிப்படத்தக்கது.
Post a Comment