கப்ர் வாசிகளின் கதறல்கள்
இன்று தொழுகையில் ஈடுபடலாம் என நான் உத்தேசித்திருந்தேன், எனினும் நான் நேற்றிரவு திடீரென்று மரணித்துவிட்டேன்!
🤔
நாளை முதல் நல்வழியில் மாத்திரமே உழைத்து உண்ணலாம் என்று எண்ணியிருந்தேன், ஆனால் நேற்று நடந்த திடீர் வீதி விபத்தில் நான் மரணித்துவிட்டேன்.
🤔
இனியாவது உறவினர்களோடு உறவைப் பேணி நடக்கலாம், பக்கத்து வீட்டோடு பரஸ்பர உறவைப் பேணலாம் என நாடியிருந்தேன், திடீரென நான் மாரடைப்பால் மரணித்துவிட்டேன்.
🤔
இனியாவது ஸகாத்தை கொடுத்து தானதருமங்கள் செய்து நன்மைகளை சம்பாதிக்காலம் என திட்டம் தீட்டியிருந்தேன், நேற்று நடந்த மண்சரிவால் மண்ணோடு மண்ணானேன்.
🤔
வெகு சீக்கிரம் குடிப்பழக்கத்தையும், குடுப்பழக்கத்தையும் விடுபட்டு மனிதனாக வாழலாம் என தீர்மானித்தேன், நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுடுபட்டு இறந்து போனேன்.
🤔
அறுபது வயதான பிறகு பள்ளிவாசலில் அமர்ந்து அதிகமதிகம் உபரி வழிபாடுகள் ஈடுபடலாம் என முடிவுசெய்தேன், ஆனால் நாற்பதாவது வயதிலேயே நான் மரணித்துவிட்டேன்.
🤔
ஐம்பதாவது வயதில் ஹஜ் செய்யலாம் என திட்டமிட்டிருந்தேன். 49 ஆவது வயதில் புற்றுநோய் வந்து மரணித்தேன்.
🤔
அடுத்த மாதம் முதல் வட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்காலம் என உறுதிபூண்டேன். இந்த மாதம் நடந்த தீ விபத்தில் சிக்கி இறந்து போனேன்.
🤔
நாளை முதல் யாருடனும் வீண் வம்பை வளர்க மாட்டேன் என்று முடிவு செய்தேன். இன்றிரவு உறங்கிய நான் கலையில் விழித்து எழும்பவில்லை.
✍ கல்லறைவாசிகளின் ஓசைகள்
✍ தமிழாக்கம் / imran farook
Post a Comment