Header Ads



கொலைக் களமாகும் நானுஓயா - தொடர்ந்து செல்லும் விபத்துக்கள்


நானுஓயா பிரதான நகரில், நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவிலுள்ள நானுஓயா பிரதான வீதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் லொறி மற்றும் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளன.


அத்துடன் லொறியில் அமர்ந்திருந்த சிறுவன் சிறிய காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஒன்று, நானுஓயா பிரதான நகரில் வீதியிலுள்ள எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றுடன் மோதியுள்ளது. இதில் குறித்த லொறியும் முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளன.


சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்


டி.சந்ரு செ.திவாகரன்


No comments

Powered by Blogger.