ரணில் கூறுவதை விட, நிலமை எதிர்மறையாகவே உள்ளது
சுகாதாரத்துறைமீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ள சுகாதார அமைச்சர், மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவை உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
ஆனால், நடைமுறையில் நிலமை எதிர்மறையாக உள்ளது. பொருளாதாரப் பாதிப்பின் ஒட்டுமொத்த சுமையும் நடுத்தர மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. நாட்டில் இலவச சுகாதார சேவை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடு நெருக்கடி தோற்றம் பெற்றவுடன் அவசர கொள்வனவு முறையில் திறந்த விலை மனுக்கோரல் இல்லாமல் மருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
எதிர்மறையாகப் பேசுவதிலும் இரண்டு குழுக்களிடையே வெறுப்பைத் தூண்டி நெருப்புக் கொடுப்பதிலும் விசேட திறமைவாய்ந்தவர் தான் இந்த பூருவன்ஸ. சுகாதாரத்துறையில் நடைபெறும் மரணங்கள், கண்பார்வை தெரியாமல் போதல் போன்ற காரணங்களுக்காக சுகாதார அமைச்சரும் அதிகாரிகளும் பதவி விலக வேண்டும் என கோரும் இந்த பூருவன்ஸ, தனக்கு இரண்டு பாஸ்ட்போர்ட்கள் இருப்பதும் தூதராண்மை பாஸ்ட்போர்ட் பெற்றுக் கொள்ள பிழையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டபின்னர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஆனால் குற்றங்களை ஒன்றுக்குப்பின் ஒன்றாக செய்து கொண்டு விரட்டப்படும் வரை அமைச்சராகவே இருந்த இந்த பூருவன்ஸ மற்றவர்களுக்கு பதவி விலகச் சொல்ல என்ன உரிமையிருக்கின்றது.
ReplyDelete