பல்டிக்கு தயாராகும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவதற்கு தயாராகவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வத்தளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் சிறந்த முறையில் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான சந்தர்ப்பம் தற்போது மீண்டும் உருவாகியுள்ளது.
இதுவரை காலமும் சஜித் பிரேமதாஸ சிறந்த செயல் திறன் கொண்ட தலைவர் என நினைத்திருந்த போதிலும் அவர் செயல்திறன் அற்றவர் என்பது தெளிவானதன் பின்னரே ஐக்கிய தேசிய கட்சியில் தாம் மீண்டும் இணைந்ததாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
என்னைக் கட்சியிலிருந்து விலக்கிவிட்டார்கள் இனி கட்சியையும் பலவீனப்படுத்தும் படுபொய்களை இட்டுக்கட்ட ஆரம்பித்துவிட்டேன்.
ReplyDelete