செய்தி வாசிக்கும் செயற்கைப் பெண்..!
படத்தில் நீங்கள் பார்க்கும் செய்தி வாசிப்பாளர் உண்மையான பெண் அல்ல.
செயற்கைப் பெண்.
செயற்கை நுண்ணறிவின்(ஏஐ) அடிப்படையில் உருவாக்கப்பட்ட இளம் பெண்.
பெயர் லிசா.
ஒடியா மாநிலத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இந்தச் செயற்கைப் பெண் செய்தி வாசிக்கிறார்.
(“வாசிக்கிறார்” என்று சொல்வதா? “வாசிக்கிறது” என்று சொல்வதா?)
ஏராளமான மொழிகளைக் கையாளும் திறமை உள்ளவர் லிசா.
தற்போதைக்கு ஒடிய மொழியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளார்.
இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனித இயந்திரங்கள் பற்றி எழுதிய ஒரு பதிவு நினைவுக்கு வருகிறது.
“மிக விரைவில் அவரவர்க்குத் தேவையான வடிவில், அளவில், மணமகன்கள், மணமகள்கள் கடைகளில் விற்பனைக்குக் கிடைப்பார்கள்” என்று எழுதியதாக நினைவு.
இதோ, செயற்கைப் பெண் வந்துவிட்டார்.
மிக விரைவில் செயற்கை ஆணும் வந்துவிடுவார்.
எதிர்கால உலகத்தை இனி இந்தச் செயற்கை நுண்ணறிவுதான் ஆளப்போகிறது.
அப்படியானால் மனிதர்கள்?
அந்தச் செயற்கை நுண்ணறிவை ஆள்வார்கள்.
-சிராஜுல்ஹஸன்-
Post a Comment