தப்பியோடிய ஒரு வருட நிறைவில், கோட்டாபய என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா..?
கடந்த வருடம் ஜூலை 9 ஆம் திகதி மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் இரகசியமாக நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை,
இவ்வருடம் அதே தினத்தில் தனது மனைவி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காணமுடிந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோட்டாபய மற்றும் அபேவர்தன இருவரும் சிங்கப்பூரிலிருந்து ஒரே விமானத்தில் நாட்டை வந்தடைந்ததுடன் விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு பொழுது போக்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். TM
Post a Comment