நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நிலை - ஜீவன்
இன்று (18.07.2023) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானால் நீர் கட்டணம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஜீவன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது, "நீர் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்துவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியிருந்தேன்.
மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர்வழங்கல் துறையை நிர்வகிப்பதற்கு 425 மில்லியன் ரூபா செலவு ஏற்படுகின்றது. இதற்கு மேலதிகமாக 2 ஆயிரத்து 400 மில்லியன் ரூபா கடனும் செலுத்தப்படுகின்றது.
இதுவரை காலமும் முறையான நடவடிக்கை இடம்பெறாமை இதற்கு காரணமாகும். அதனைச் சீர் செய்வதற்கான நடவடிக்கையாகவே இது இடம்பெறுகின்றது.
மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நீர் கட்டணம் உயர்த்தப்படும். நாடாளுமன்றத்தில் நாளை (19.07.2023) ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்போது இது பற்றி தெளிவுபடுத்தப்படும். ஒரு குடும்பத்தில் ஐவர் இருந்தால் 15 முதல் 20 அலகுகள்தான் பயன்படுத்துகின்றனர்.
இவர்களுக்கும், சமுர்த்தி பயனாளிகளுக்கும் நீர் கட்டண உயர்வால் தாக்கம் ஏற்படாது. நீர் கட்டண அதிகரிப்பு யோசனை எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மக்களின் வயிற்றில் அடிக்க வேண்டும் என்ற நோக்கம் எமக்கு இல்லை. நீர்க்கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் அண்மையில் கூட்டமொன்றை நடத்தியிருந்தேன். இதில் எதிரணியினர் பங்கேற்கவில்லை.
அன்று இல்லாத அக்கறை இன்று திடீரென ஏன் வந்துள்ளன? தூங்குபவரை எழுப்பலாம். தூங்குபவர்போல் நடிப்பவரை எழுப்ப முடியாது" என தெரிவித்துள்ளார்.
Min kattanam seluththa mudiyavilla... Pala maatha niluvaihal irukkirathu...
ReplyDeleteAduththa athiharippaaaaaa???
Engalukkum enga irunthu daa panam varum...
நீர் கட்டணத்தை அதிகரிக்க கிளியும் பாடுது.
ReplyDelete