தேசிய குடியரசு முன்னணியின் உப தலைவர் நிஸாம் (நளீமி) வபாத்தானார்
கடுகண்ணாவையைச் சேர்ந்தவரும், பாட்டளி சம்பிக ரணவக்க தலைமையில் உருவான தேசிய குடியரசு முன்னணியின் உப தலைவருமான நிஸாம் (நழிமி) வபாத்தானார்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
Najah Mohamed
சகோ.நிஸாம் (நழிமி) கடுகண்ணாவையைச் சேர்ந்தவர். வளர்ந்து வரும் அரசியல் தலைவர், முஸ்லிம் அரசியல் மற்றும் தேசிய அரசியல் குறித்து அடிக்கடி என்னோடு கலந்துரையாடுவர். அவர் சார்ந்துள்ள கட்சியின் முக்கிய கூட்டங்களுக்கு அழைப்பும் விடுப்பார். அண்மையில் பாட்டளி சம்பிக ரணவக்க தலைமையில் உருவான தேசிய குடியரசு முன்னணியின் உப தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு ஒரு தேசிய கட்சியில் அதி உயர் பதவியைப் பெற்று தனது அரசியல் பயணத்தை துவங்கியவர். அழ்ழாஹ்வின் நாட்டம் அவரது அரசியல் பயணம் இன்றுடன் முடிவுற்று, மறுமைக்கான பயணத்தை துவங்கியுள்ளார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
சற்று முன் பேரதிர்ச்சியாக அவரது மரணச் செய்தி வந்து சேர்ந்தது.
அழ்ழாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸில் சேர்ப்பானாக.
Post a Comment