Header Ads



இப்படியும் திருடிச் செல்கிறார்கள்


இலங்கையில் ரயில் பயணங்களின் போது பயணப் பொதிகளை எடுத்துக் கொண்டு வேறு பயணப்பொதிகளை வைத்து செல்லும் புது வகையான திருட்டு இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.


கடந்த சில நாட்களாகவே இடம்பெறும் இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பயணிகள் அவதானமாக இருக்க வேண்டும் என இலங்கை ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் பிரதிச் செயலாளர் சிந்தக சிறிவர்தன தெரிவித்தார்.


ரயிலில் பயணிகள் அதிகமுள்ள பெட்டிகளுக்குள் ஏறும் இந்த ஏமாற்ற கும்பல் போலியான பைகளை வைத்து விட்டு உண்மையானவற்றை எடுத்துச் செல்கின்றனர்.


பயணிகளின் தங்கள் பை தொடர்பில் கவனத்தை இழக்கும் வரை காத்திருந்து பைகளை எடுத்துக் கொண்டு இறங்கி விடுகின்றார்கள்.


ரயிலில் இருந்து இறங்கும் முன் பைகள் மாற்றப்பட்டிருப்பதனை பயணி கண்டுபிடித்து விட்டால் தவறுதலாக பை மாறிவிட்டதாக கூறி சமாளித்துவிட்டு செல்வதாகவும் தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.