இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தரப்பினர் பலர் உள்ளனர்.
நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சர்வ கட்சி மாநாட்டில் அதிகார பகிர்வு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எவ்வாறு அதிகார பகிர்வை மேற்கொள்வது? அல்லது எந்த சந்தர்ப்பத்தில் அதை செயல்படுத்துவது என்பது தொடர்பில் சிந்தித்து, நிதானமாக செயல்பட வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். அதுவே எனது நிலைப்பாடாகும்.
நாட்டில் சுமுகமான நிலை இருக்கும் போதே இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவேண்டும். நாட்டில் நெருக்கடி நிலை காணப்படும் போது இவ்வாறான பிரச்சினைகளை எடுத்துக் கொள்ளும் போது இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தரப்பினர் பலர் உள்ளனர். அது அவர்களுக்கு சாதகமாக மாறி விடும். இதற்கு முன்னரும் இவ்வாறு இனவாத செயற்பாட்டை கொண்டே சிலர் ஆட்சிக்கு வந்தனர்.
இதனை செய்வதற்கு சரியான நேரம் இதுவல்ல என நான் நினைக்கிறேன். இருப்பினும் அதற்கான நியாயம் வழங்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
Post a Comment