பெருந்தொகை சட்டவிரோத கசிப்பு கைப்பற்றப்பட்டது
கிளிநொச்சியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை, கிளிநொச்சி-இராமநாதபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைவாக கல்மடு சுடலைக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 120 லீற்றர் கசிப்பும், 1685 கோடாவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தே நபர்களும் கசிப்பு உற்ப்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மோட்டார் சைக்கில் ஒன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
Post a Comment