Header Ads



அமைச்சர் பவித்ராவின் தேயிலை தொழிற்சாலையில் தீ - பல கோடி ரூபா இழப்பு


அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை தீப்பற்றி எரிந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இரத்தினபுரி லெல்லோப்பிட்டிய வெலிமலுவ பிரதேசத்தில் உள்ள இந்த தனியார் தேயிலை தொழிற்சாலை தீப்பற்றி எரிந்து முற்றாக அழிந்துள்ளது.


இன்று -23- காலை 2 மணியளவில் தீ ஏற்பட்டுள்ளதுடன் சிறிது நேரத்தில் தொழிற்சாலை முழுவதும் பரவியுள்ளது.


தீ ஏற்பட்ட போது 10க்கும் குறைவான ஊழியர்களே தொழிற்சாலையில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தீக்காரணமாக பல கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் மொத்த சேத விபரங்கள் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை.


அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலைக்கு சொந்தமான 5 லொறிகள் தீயில் அழிந்துள்ளன.


தீப்பரவிய போது பிரதேசவாசிகளும், பின்னர் தீயணைப்பு படையினரும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சித்த போதிலும் அங்கு நிலவிய காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ முற்றாக பரவியுள்ளது.


இன்று காலை வரை தொழிற்சாலை தீயில் எரிந்துக்கொண்டிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.


இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சேனக வீரசிங்க, தீப்பிடித்து எரிந்த தேயிலை தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டுள்ளார்.


தீ ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறிய இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.