பொது வேட்பாளராக ஜனக..?
எதிர்வரும் அதிபர் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளராக தன்னை முன்னிறுத்துவதாகவும், அதற்கு தேவையான வேலைத்திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சி, நிறம், ஜாதி, மதம் எதுவாக இருந்தாலும் தமக்கு ஆதரவளிக்க பலர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால், நாட்டை ஆட்சி செய்யத் தெரிந்த தலைவர் இருக்க வேண்டும் என்றார்.
இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் சம்மதத்துடன் தான் அதிபராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்த அவர், நாட்டில் தற்போது மக்கள் அபிப்பிராயம் இல்லாத ஒரு தலைவர் இருப்பதாகவும் தெரிவித்தார்.
Post a Comment