Header Ads



பல்துறை ஆளுமை மர்ஹும் முகம்மது யூசுப் என்ற சமூக சேவகர்

திருகோணமலையைச் சேர்ந்த அல்-ஹாஜ் அப்துல் கரீம் முகம்மது யூசுப் அவர்களின் மரணச்செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது.


அவர் 1928 இல் பிறந்து, 1955 இல் கதீஜா உம்மாவை மணந்தார். அத்தம்பதியருக்கு முகம்மது ஹூசைன், சித்தி ஹனூன், சித்தி சப்ரினா, சித்தி நிஹாரா, முகம்மது ஷபீக், சித்தி ஷரீபா மற்றும் சித்தி பாத்திமா ஆகிய ஏழு வாரிசுகள் உள்ளனர்.


முகம்மது யூசுப் அவர்களின் வாழ்க்கை சாதாரணமாகவே ஆரம்பித்தது. ஆனால் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலம் அவர் மற்றவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார். மேலும் மனிதன் தனது வாழ்க்கையில் உச்சத்தைத் தொடுவதற்கு கல்வி இன்றியமையாதது என்று நம்பிய அவர் தனது குழந்தைகளின் கல்வியில் மிகவும் கவனம் செலுத்தினார். இவ்வாறாக, அவரது வாழ்க்கை இக்காலத்திய சமூகத்திற்கும் எதிர்கால சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. 


அவரது மகன்கள் மற்றும் மகள்கள் இலங்கை, இந்திய, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் சிறந்த கல்வியைப் பெற்றிருந்தனர். அவரது முதல் மகன் முகம்மது ஹுசைன் முகம்மது யூசுப் பேராதனை பல்கலைக்கழகத்தில் தனது BSc (Hons) சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு இங்கிலாந்தில் உள்ள லஃப்பரௌ (LOUGHBOROUGH) பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அவர் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையில் பதிவு பெற்ற பட்டய சிவில் பொறியியளாளராகத் திகழ்கிறார். மெல்போர்னில் உள்ள கிரேட்டர் வெஸ்டர்ன் வாட்டர் நிறுவனத்தில் (Greater Western Water) பணிபுரியும் அவர், ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முன்பு கத்தார் நீர் கார்ப்பரேஷனில்  சில ஆண்டுகள் பணியாற்றினார்.


அவரது மகள் பேராசிரியர் டாக்டர் சித்தி ஹனூன் யூசுப் போகரேல், புதுதில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) மருத்துவப் பட்டம் மற்றும் எம்.டி. (MD) பட்டம் பெற்றார். ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் தனது எம்.டி. (MD) மற்றும் பிஎச்.டியை (PhD) வெற்றிகரமாக முடித்தார். அவர் சிட்னியில் உள்ள பெண்களுக்கான ராயல் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுகிறார்.


அவரது மற்றுமொரு மகள் டாக்டர் சித்தி சப்ரீனா இக்ரம் MD, DFM மற்றும் MCGP ஆகிய பட்டங்களை இலங்கையில் பெற்று திருகோணமலை பொது மருத்துவமனையில் பணிபுரிகிறார்.


இவரது மகன் முகம்மது ஷபீக் முகம்மது யூசுப் தனது BSc (Hons) பொறியியல் படிப்பை பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், MBA முதுகலை பட்டப் படிப்பை இங்கிலாந்தில் உள்ள நார்தம்ப்ரியா (NORTHUMBRIA) பல்கலைக்கழகத்திலும் முடித்துள்ளார்.


முகம்மது யூசுப் அவர்களின் மருமகள்கள் முனீரா முகம்மது ஹுசைன் மற்றும் ஷர்மிளா முகம்மது ஷபீக் ஆகியோர் ஆவர்.  ஷர்மிளா அவர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் BCom (Hons), மற்றும் அவுஸ்திரேலியாவிலுள்ள டீக்கின் (DEAKIN) பல்கலைக்கழகத்தில் MA Teaching ஆகிய பட்டங்களைப் பெற்று தற்பொழுது மினாரெட் கல்லூரியில் ஆசிரியராக பணி புரிகிறார். முகம்மது யூசுப்பின் மருமகன்களில் ஒருவரான பேராசிரியர் டாக்டர். போகரேல், இரண்டு எம்.டி. (MD) படிப்புக்களை முடித்துவிட்டு உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆலோசகராக உள்ளார். அதோடு மட்டுமல்லாமல், அவர் பொது சுகாதாரத் துறையின் இயக்குநராகவும், சமூக மருத்துவத் துறைத் தலைவராகவும் இருக்கிறார். முகம்மது  இக்ராம் சனூன் BSc (Hons) பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். முகம்மது ஹனீபா வஹாப் மற்றும் அப்துல் லத்தீப் ஜபீர் ஆகியோரும் முகம்மது யூசுப்பின் மருமகன்கள் ஆவர்.


முகம்மது யூசுப் அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ளவராக இருந்தார். கால்பந்தின் மீது அவருக்கு அளப்பரிய ஆர்வம் இருந்தமையால் அவர் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் திகழ்ந்தார். அவரது மன உறுதியும் திடகாத்திரமும் அவரது அணி பல போட்டிகளில் வெற்றி பெற உதவியது. இலங்கை தபால் துறையில் பணிபுரிந்த அவர், ஓய்வு பெறும் வரை அரசாங்க சேவைக்காக தன்னை அர்ப்பணித்தவர்.


‘டமாஸ் ஹவுஸ்’ எனப்படும் ஒரு வணிக நிறுவனத்தை நிறுவி அதை சிறப்பாக நடத்தியதன் மூலமாக அவர் ‘டமாஸ் யூசுஃப்’ என்று அன்புடன் நினைவுகூரப்பட்டார். அந்நிறுவனத்தின் மூலமாக அவர் ‘டமாஸ்’ அடையாள கைக்கடிகாரங்களை சந்தைப்படுத்தினார். அவருக்கு விற்பனைத் திறன் மிக அதிகமாகவே இருந்தது. இதனாலேயே அவரைப்பற்றி மக்கள் கூறுகையில், அவர் எந்த பிராண்ட் கடிகாரத்தையும் யாருக்கும் விற்க கூடிய திறமையுடையவர் என்று அறியப்பட்டார்.


தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளை சரளமாக பேசத் தெரிந்த அவர், நடப்பு விவகாரங்களில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தினசரி செய்தித்தாள்களை தவறாது படிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்.


முகம்மது யூசுப் ஒரு சமூக சேவகராக, குறிப்பாக பன்மொழி மற்றும் பன்முக கலாச்சாரத்தைக் கொண்ட திருகோணமலை நகரின் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஆர்வமுடன் ஈடுபட்டார்.


மர்ஹூம் முகம்மது யூசுப் ஒரு இறையச்சமுள்ள மனிதர், ஒருபோதும் ஐவேளைத் தொழுகையை தவறவிட்டதில்லை.


அவரது இறுதிக்கிரியை திருகோணமலையில் நடைபெற்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் (SWT) அவரை மன்னித்து அவருக்கு ஜன்னதுல்-ஃபிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கத்தை அளிப்பானாக. ஆமீன்.


- யூசுப் முஸ்தபா (ஆஸ்திரேலியா)



No comments

Powered by Blogger.