கடனுக்காக நாசமாகும் வருமானம்
இலங்கை அரசாங்கம் வருடத்திற்கு 100 ரூபாய் வருமானத்தைப் பெறும் போது, 118 ரூபா கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அர்ப்பணிக்க வேண்டிய நிலையில் உள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிட்டப்பட்ட ஆய்வு அறிக்கைக்கு அமைய இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியா ஊடகமான பிபிசி வானொலியில் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய வங்கி அறிக்கைக்கமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக இலங்கையின் நிலுவையிலுள்ள கடன் 118.7 சதவீதம் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், 2032 ஆம் ஆண்டளவில் இந்த கடன் சதவீதத்தை 95% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் அதன் பிற செலவுகள் இருந்த போதிலும் நாட்டின் கடன் தவணை மற்றும் கடன் வட்டியை செலுத்துவதற்காக வருடாந்த அரசாங்க வருவாயில் 70 சதவீதத்தை செலவிட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Post a Comment