Header Ads



பொலிஸாருக்கு எதிராக இத்தனை ஆயிரம் முறைப்பாடுகளா..?


பாரபட்சமாக செயற்படுவதாக பொலிஸாருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


கிடைத்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை பாரபட்ச செயற்பாடுகளுடன் தொடர்புடையவை என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இந்த வருடத்தில் பொலிஸாருக்கு எதிராக 11,450 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.


இவற்றில் 9, 774 முறைப்பாடுகள் பொதுமக்களிடம் இருந்து முறைப்பாடுகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட 1960 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக முன்வைக்கப்பட்டுள்ளன.


ஏனைய முறைப்பாடுகள் பொது முறைப்பாட்டு புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளன.


இதுவரை 1800-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


விசாரணைகளுக்கு சமூகமளிக்காமை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது.


1960 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலமும் பொலிஸாரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களால் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.