Header Ads



யுவதியின் உடலுறுப்புகள் மீது மேலதிக பரிசோதனை


தனது காதலனுடன் விடுதியில் தங்குவதற்காகச் சென்ற 22 வயதான பிரதீபா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை (05) பகிரங்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


இரத்தினபுரி - இறக்குவானை, மாதம்பை பகுதியில் ஹோட்டல் அறையொன்றில் தூக்கில் தொங்கிய சடலமாக மீட்கப்பட்ட யுவதி, தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் பிரதீபாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தபோதும், யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக அவரது காதலன் கூறியுள்ளார்.


இதனையடுத்து, கஹவத்தை சட்ட வைத்திய அதிகாரி எம்.டி.எம்.எஸ்.கே. திஸாநாயக்க நேற்றைய தினம் தனது தீர்மானத்தை பகிரங்கமாக தெரிவித்து யுவதியின் உடலுறுப்புகள் மேலதிக பரிசோதனைக்கு கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.


இறக்குவானையைச் சேர்ந்த என்ற இந்த யுவதியின் மர்ம மரணம் தொடர்பில் இறக்குவானை பதில் நீதிவான் சரத் விஜயகுணவர்தனவின் உத்தரவில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


உயிரிழந்த யுவதி, கடந்த 4 ஆம் திகதி பகல் மாதம் பே பனாவல வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றுக்கு தனது காதலனான இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியுடன் சென்று அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்த்க்கது. 

No comments

Powered by Blogger.