Header Ads



முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் வந்தாலே...


முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் வந்தாலே, உலகளாவிய இஸ்லாம் போபியா ஊடகங்கள் முஸ்லிம்களை விமர்சித்து, சலசலப்பை ஏற்படுத்த ஒரு துரும்பு கிடைத்து விடுகின்றது. 


பிரபல எழுத்தாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஒரு டுவீட்டின் மூலம் இந்த ஊடகங்களின் வாய்களுக்கு மண்ணை அள்ளி வீசியுள்ளார்:


'முஸ்லிம்கள் கால்நடைகளை அறுத்து  பலியிடுவதற்கு எதிராக வெறுப்பூட்டும் பிரச்சாரங்கள் சர்வதேச ஊடகங்களில் முன்னெடுக்கப்படுவதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இங்கே KFC, McDonald's, Burger King மற்றும் கென்டக்கி போன்ற மிகப் பெரிய உணவகங்களில் பணக்கார வர்க்கத்தின் பசி தீர்ப்பதற்காகவும், கோடிக்கணக்காக பணம் பார்ப்பதற்காகவும் தினமும் பல லட்சக்கணக்கான விலங்குகள் அறுக்கப்படுகின்றன. அதை கேட்க பார்க்க ஆளில்லை. 


ஆனால் முஸ்லிம்கள் அவர்களது பெருநாளின் போது ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் இலவசமாக உணவளிக்கும் நன்நோக்கோடுதான் கால்நடைகளை அறுத்துப் பலியிடுகின்றனர்.


நாம் உண்மையில் புத்தியோடுதான் விமர்சிக்கின்றோமா? அல்லது புத்தியை கழட்டி வைத்து விட்டுத்தான் விமர்சிக்கின்றோமா என்று தெரியவில்லை. 


✍ தமிழாக்கம் / imran farook




No comments

Powered by Blogger.