Header Ads



ஏகாதிபத்தியர்களும் பணிந்த தலதா தேரர்களுக்கும் பில் எழுதும் அரசாங்கம்


உலகம் முழுவதிலிருந்தும் அன்றுதொட்டு இன்று வரை பௌத்தர்களின் தலைசிறந்த வழிபாட்டுத்தளமான ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்று சிறப்புமிக்க தலதா பெரஹெரவிற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் மின்கட்டணத்தை எழுதிக் கொடுத்ததன் மூலம்,அரசாங்கம் தனது கேவலத்தனமான, நேர்மையற்ற கொள்கைப் போக்கை வெளிப்படுத்தியுள்ளதோடு இந்த இழிவான செயல் பௌத்த மதத்தையும், ஒட்டுமொத்த பௌத்த சமுதாயத்தையும்,ஒட்டுமொத்த நாட்டையும் அவமதிக்கும் செயலாகும் என்பதோடு, குறிப்பாக வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா பெரஹெரவை கவனத்திற் கொண்ட உலக சமூகத்திற்கும் இழைக்கப்பட்டதொரு கடுமையான அவமானமாக நான் கருதுகிறேன்.


இது எங்களுக்குள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை நினைவு கூறுவதோடு இந்த தன்னிச்சையான முடிவை எடுத்த அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.


குறிப்பாக குடியரச பெரஹெர போன்ற நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் தயக்கமின்றி நிதி ஒதுக்கியது என்பதை இந்த தருணத்தில் நினைவில் கொள்ள வேண்டும் என்பதோடு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரசித்தி பெற்ற தலதா பெரஹெரவிற்கு அரசாங்கம் அளிக்கும் கரிசனைகள் தொடர்பில் எமக்கு மத்தியில் மிகவும் அதிருப்தி நிலவுகிறது.


இதற்கு முன்பும்,பல விகாரைகளை இலக்கு வைத்து கட்டுக்கடங்காத மின்கட்டணத்தை அரசாங்கம் பிறப்பித்துள்ளதோடு இது பெரும் அதிருப்திக்குறிய விடயமுமாகும்.


எந்தவொரு நாடும் தனித்துவமான பல கலாச்சார மத பெறுமான கட்டமைப்புகளை கொண்டுள்ளது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதோடு,

மத மற்றும் கலாசார விடயங்களில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாது என்பதனை நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும்.


விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கு சலுகை விலையில் மின்சாரக் கட்டணம் அறவிடுவதை அரசாங்கம் தவிர்க்க முடியாது மேற்கொள்ள வேண்டும் என்பதோடு இதற்காக கலாச்சார நிதியத்தின் பங்களிப்பையும் பெற்றுக் கொள்ள முடியும்.


இதனை இவ்வாறு மேற்கொள்ளாது,மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாங்க முடியாத சுமையை சுமத்துவது குறித்து எங்களின் ஆழ்ந்த வெறுப்பையும்,

அதிருப்தியையும் எதிர்ப்பையும் தெரிவிக்கிறோம்.


சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர்


1 comment:

  1. கொக்கரிப்பதை சற்று நிறுத்தி விட்டு தலதாவுக்கும் ஏனை ய சமய தேவாலயங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள மின்சார வசதிக்கான செலவை யார் வழங்குவது உங்கள் பணத்திலிருந்தா? அப்படியானால் அந்த மின்சார கட்டணத்தை உங்கள் பணத்திலிருநது செலுத்திவிட்டு வேலையைப் பாருங்கள். அரசாங்கத்தின் அடுத்த தெரிவு, அந்தப்பணத்தை பொதுமக்களிடமிருந்து அறவிடுவதற்கு மேலும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது. அதுதவிர மின்சார கட்டணத்தைச் செலுத்த பணம் வானத்திலிருந்து வருகின்றதா? பொதுமக்களைத் தூண்டி அரசியல் இலாபம் பெறும் எருமைத் தொழிலை இப்போதாவது விட்டுவிடுங்கள். நீங்கள் நினைப்பது போல் பொதுமக்கள் இன்றும் புல்லும் புண்ணாக்கும் உண்பதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள இன்னும் காலம் எடுக்கும். அதுவரையில் பொதுமக்களுக்கு தெவி பிஹிடய்.

    ReplyDelete

Powered by Blogger.