பொரள்ளையில் கறுப்பு ஜூலை நிகழ்வில் பதற்றம்
கறுப்பு ஜூலை தினத்தை முன்னிட்டு பொரள்ளையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவு நிகழ்வில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இவர்களை கலைக்கும் நோக்கில் பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இதன்போது இராணுவத்தினர், கலகத்தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட படையினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அமைதி போராட்டத்தை நடத்தியவர்களுக்கு எதிராக வேறு ஒரு குழுவினர் ஒன்றுதிரண்டு நினைவு நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அமைதிவழி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களையும், அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை கலைக்கும் நோக்குடன் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இரு தரப்பினரையும் அவ்விடத்தில் இருந்து பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், நினைவு நிகழ்வினை ஏற்பாடு செய்த குழுவினர் அங்கு தொடர்ந்தும் விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Post a Comment