முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பு குற்றத்தை இழைத்த நிபுணர்களுக்கு எதிராக வழக்கு
கோவிட் தொற்றால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்ட நிலையில், தகனம் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கொரோனா பணிக்குழாம் நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யத் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூடாது என்றும், அவர்களை தகனம் செய்ய வேண்டும் என்றும் குழுவின் உறுப்பினர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.
மற்ற நாடுகள் வேறுவிதமாக முடிவு செய்துள்ள நிலையில், எந்தவித அறிவியல் அடிப்படையும் இல்லாமல் இந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டன.
எனவே நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வெறுப்பு குற்றத்தை இழைத்துள்ளனர். இந்தநிலையில் குறித்த நிபுணர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் முனைப்புகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Post a Comment