Header Ads



காதலனுடன் தங்கிய காதலியின் சடலம் மீட்பு


22 வயதான  யுவதி ஒருவர் தனது காதலனுடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது  குறித்த யுவதி தன்னுயிரை மாய்த்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.   


இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இறக்குவானை  பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன், தனது காதலியான  22 வயதுடைய  யுவதியுடன் முச்சக்கரவண்டியில் இறக்குவானை பனாவல பகுதிக்குச் சென்று அங்குள்ள  விடுதி ஒன்றில் அறை ஒன்றைப் பதிவு செய்து அங்கு இருவரும் தங்கியுள்ளதாக  இறக்குவானை பொலிஸார்  தெரிவித்தனர்.


குறித்த இளைஞன்  தனது காதலியை  அந்த அறையில் விட்டுவிட்டு மதிய உணவு வாங்குவதற்காக  வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்க்கையில் தனது காதலி  குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டதாகவும் குறித்த இளைஞன் பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.   


சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞர் விடுதி  ஊழியர்களுக்கு அறிவித்ததையடுத்து, அவர்களின் உதவியுடன் யுவதி  காவத்தை வைத்தியசாலைக்குக் கொண்டு  செல்லப்பட்டுள்ளார்.


அங்கு  யுவதியைப் பரிசோதித்த  வைத்தியர்கள் அவர்  ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


No comments

Powered by Blogger.